New Updates! Fresh news just arrived.

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்: வெளியாகியுள்ள முக...

News

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்: வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

August 18, 2026 3:28 pm
மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்: வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற வட்டியில்லா கடன் திட்டத்தினனுடைய 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்களானது தற்போது கோரப்பட்டுள்ளன.

இதன்படி, உரிய விண்ணப்பங்களினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரைக்கும் சமர்ப்பிக்க வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள்:

2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சமாக மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தியான (S) பெற்றிருக்க வேண்டும்.

கல்வி பொதுத்தராதர உயர்தர அல்லது கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சமான சாதாரண சித்தியான (S) பெற்றிருக்க வேண்டும்.

பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சமாக 30 புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்றான (2026.09.27) வயது 25க்கு மிகாமலிருக்க வேண்டும்.

குறித்த திட்டத்தின் ஊடாக பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் வணிகம், மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களினை வழங்கும் 16 நிறுவனங்களின் ஊடாக 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளினை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now