தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்: முத...
News
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்: முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் ஜெயகரன் தலைமையிலான ஆய்வுக் குழுவுக்கு, இந்திய – இலங்கை கூட்டு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வுத் திட்டத்தின் கீழ் 60 இலட்சம் ரூபா (6 மில்லியன் ரூபா) பெறுமதியான ஆய்வு நிதியுதவி வழங்குவதற்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்ற 420 விண்ணப்பதாரர்களின் ஆய்வுத் திட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளமை இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
“Solid Waste Application for Sustainable Construction involving High and Techno-Managerial Approaches (SWACHTA)” எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வாய்வுத் திட்டம், திண்மக் கழிவுகளை நிலைபேறான கட்டுமானப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நவீன தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுப் பொருட்களின் மீள்பயன்பாடு, வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் மற்றும் நிலைபேறான கட்டுமான நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் ஊடாக, தற்போது சுற்றுச்சூழலுக்கு சவாலாக விளங்கும் திண்மக் கழிவுகளைப் பயனுள்ள கட்டுமான வளங்களாக மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராய்வதுடன், கட்டுமானத்துறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வுத் திட்டம் இந்தியா – இலங்கை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்கான கூட்டு ஆய்வுப் பட்டறைத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டு, இரு நாடுகளின் தொடர்புடைய நிறுவனங்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு நிதியுதவிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல், நிதி நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் செயற்படுத்தல் பொறுப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கிடையில் முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2026 ஜூலை 01ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி துரைசிங்கம் ஜெயகரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை இத்திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தையும், இந்திய – இலங்கை ஆராய்ச்சி ஒத்துழைப்பின் பெறுமதியையும் எடுத்துக்காட்டுகிறது.
ஒப்பந்தத்தின் பிரகாரம், அமைச்சின் செயலாளர் முதலாம் தரப்பாகவும், ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இரண்டாம் தரப்பாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் மூன்றாம் தரப்பாகவும் இணைந்து திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
இந்திய – இலங்கை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டமானது, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஊடாக இரு நாடுகளையும் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து விஞ்ஞான ஆராய்ச்சி, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் அறிவுப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் SWACHTA ஆய்வுத் திட்டம் இரு நாடுகளுக்கிடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைகிறது.
இந்த நிதியுதவியின் மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறையின் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துவதுடன், சர்வதேச ஆய்வாளர்களுடனான தொடர்புகளை விரிவுபடுத்தவும், புதிய தொழில்நுட்ப அறிவை உருவாக்கவும் வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திண்மக் கழிவு முகாமைத்துவம், வளங்களின் மறுபயன்பாடு மற்றும் நிலைபேறான கட்டுமானத்துறை ஆகியவற்றில் நடைமுறைப் பயன்பாடுகளைக் கொண்ட ஆய்வு முடிவுகளை உருவாக்குவதற்கும் இத்திட்டம் பங்களிக்கும் என நம்பப்படுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்ற 420 விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, 60 இலட்சம் ரூபா பெறுமதியான சர்வதேச கூட்டு ஆய்வு நிதியுதவியைப் பெற்றுள்ளமை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஆய்வுத் திறனுக்கும், சர்வதேச மட்டத்திலான ஆராய்ச்சிப் போட்டித்திறனுக்கும் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகும்.
இவ்வெற்றியானது பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் திறப்பதுடன், இலங்கையின் சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தொழில்நுட்ப அடிப்படையிலான நிலைபேறான தீர்வுகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூருல் ஹுதா உமர்