New Updates! Fresh news just arrived.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மீண்டும் இலங்க...

News

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மீண்டும் இலங்கைக்கு!

January 29, 2026 3:14 pm
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மீண்டும் இலங்கைக்கு!
இலங்கைக்கு வழங்கப்படுகின்ற விரிவாக்கப்பட்ட நிதி வசதியினுடைய ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தினுடைய பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

'டித்வா' புயலுக்குப் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் இருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தினுடைய ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

"நிதியியல் துறையினுடைய வருமானத்தினை பலமாகச் சேகரித்தல், சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளினைப் பலப்படுத்துதல் என்பனவும் குறித்த வேலைத்திட்டத்தின் முதல் தூணாகும்.

இரண்டாவது தூணாக கடன் நிலைத்தன்மையினை நிறுவுதல், நிதி ஸ்திரத்தன்மையினைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பதாகும். விலை ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவது அதன் மூன்றாவது தூணாகும்; இதில் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்ட வெளிப்புறத் தேவைகளினைப் பலப்படுத்துவதும் உள்ளடங்கும்.

நான்காவது நிதி ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதாகும். இறுதியாக நிர்வாகத்தினை மேம்படுத்துதல் மற்றும் ஊழலைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவரை இந்த இலக்குகளுக்காக எட்டப்பட்டிருக்கும் முன்னேற்றம் உண்மையில் சிறப்பானது. இது தொடர்பில் பல துறைகளில் நாம் திருப்தியடைய முடியும். நெருக்கடி உச்சத்திலிருந்த சந்தர்ப்பத்தில் இருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது.

இதன்படி, வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்திருப்பதால், கடந்த ஆண்டில் 5% வளர்ச்சியினை எட்டிஇருக்கின்றது. மொத்தத் தேசிய உற்பத்தியினுடைய (GDP) முன்னேற்றமாக வரி வருமானம், நெருக்கடி நிலவிய காலத்தில் 7.3% ஆக இருந்த நிலையில், இன்று அது 14.8% வரைக்கும் அதிகரித்துள்ளது.

இதன் ஊடாக இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் பிரதிபலிக்கின்றது.

வருமானத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியினையும் ஒரு பகுதியாக அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கான அடித்தளத்தினை அமைக்கின்றது.

விலைகளினைக் கருத்திற்கொள்ளும் நிலையில், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது பணவீக்கம் 70% என்னும் உயர் மட்டத்தில் காணப்பட்ட நிலையில் இன்று அது 2% மற்றும் 3% இற்கு இடையில் காணப்படுவதுடன், மத்திய வங்கியினுடைய இலக்கான 5% மட்டத்தில் ஸ்திரமடைகின்றது."

இதேவேளை, 'டித்வா' புயலுக்குப் பின்பும் சர்வதேச நாணய நிதியத்தினுடைய வேலைத்திட்டங்கள் மிக வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கையிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தி தூதுக்குழுவினுடைய தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

"இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகின்றோம். வேலைத்திட்டத்தினுடைய அடுத்த கட்டத்தில் 'டித்வா' புயலினுடைய தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது போன்று வேலைத்திட்டத்தினுடைய அடிப்படை நோக்கங்கள் அவ்வாறே உள்ளன. ஏனெனில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீசிய புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டாமானது வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது எனக் கூறமுடியும்."
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now