இலங்கைக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநி...
News
இலங்கைக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நோக்கில் சம்பந்தப்பட்ட குழு நாட்டிற்கு வர உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இன்று இலங்கைக்கு வரும் இந்தக் குழு, 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களுக்கு இலங்கை எவ்வாறு பதிலளித்துள்ளது என்பதை ஆராய்வதும், உள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் ஏற்படும் தாக்கத்தைப் புரிந்துகொள்வதும் குறித்த குழுவின் நோக்கமாகும்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு இப்போது நிறைவடைந்துள்ளதாகவும், இந்த விஜயத்தின் போது அதன் ஒப்புதலுக்கும் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.