New Updates! Fresh news just arrived.

சர்வதேச நாணய நிதியக் குழு இன்று இலங்கை வருகை!

News

சர்வதேச நாணய நிதியக் குழு இன்று இலங்கை வருகை!

September 10, 2026 8:32 am
சர்வதேச நாணய நிதியக் குழு இன்று இலங்கை வருகை!
இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு இன்று (10) இலங்கை வரவுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை தங்கியிருக்கும் இந்தக் குழு, அரசாங்க அதிகாரிகளுடன் அடுத்த கட்ட கடன் மதிப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.

IMF தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தலைமையிலான இந்தக் குழுவின் பேச்சுவார்த்தைகளில், IMF-ன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 7ஆவது மதிப்பாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான உறுப்புரை IV ஆலோசனைகள் முக்கியமாக இடம்பெறவுள்ளன.

மேலும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், சமீபத்திய பேரண்ட பொருளாதார நிலைமைகள் மற்றும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தும்.

விஜயத்தின் நிறைவில் IMF தனது அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக பாப்பஜோர்ஜியோ தலைமையிலான குழு கடந்த ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. IMF கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now