New Updates! Fresh news just arrived.

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

News

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

January 23, 2026 11:26 am
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களினையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரைக்கும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றினை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now