நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவினால் கொலை மிரட்டலுக்கு உ...
News
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவினால் கொலை மிரட்டலுக்கு உள்ளான குடும்பப் பெண்ணுக்கு விளக்கமறியல்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவால் மிரட்டலுக்கு உள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றத்தின் நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று (25) பெரியளான் பகுதியிலுள்ள காணியினை நாடாளுமன்ற உறுப்பினர் சுத்தம் செய்ய முற்பட்டவேளை, குறித்த பகுதியில் தமது காணியும் உள்ளதாக தெரிவித்து சிலர் அவரோடு முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த காணி எல்லை பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணினுடைய உறவினரான இளைஞர் ஒருவரும் குறித்த இடத்திற்கு சென்றவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா குறித்த இளைஞனையும் எட்டி காலால் உதைத்ததாகவும் அவ்இளைஞரினுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது கைத்துப்பாக்கியினை எடுத்து நீட்டி உன்னை கொலை செய்வேன் என கூறி பெண்ணுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டலும் விடுத்துள்ல் நிலையில் சட்டத்தரணி கௌசல்யாவும் குறித்த பெண்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களினை காணொளியும் பதிவு செய்துள்ளார்.
மேலும், அருச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்த நிலையில் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் இன்று (26) மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியா நிலையில் அவரை எதிர்வருகின்ற 29ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பகிரங்க கொலை மிரட்டல் மற்றும் இளைஞரையும் தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினரின் மீது இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்