நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணை!
News

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) இரவு நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, சந்தேகத்திற்கிடமாக 31 வயதுடைய குடும்பஸ்தர் நடமாடி வருவதாக கல்முனை தலைமையக நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக்கிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதி சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது போதை ஒழிப்பு பிரிவில் உள்ள உப பொலிஸ் பரிசோதகர்களான முஸ்தபா மற்றும் குமாரசிங்க ஆகியோர் இணைந்து இச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் 5000 மில்லி கிராம் நாட்டு கஞ்சா சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்டது.
மேலும், கைதான சந்தேக நபரை இன்று (16) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாறுக் ஷிஹான்