New Updates! Fresh news just arrived.

சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 300 பேருக்கு...

News

சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 300 பேருக்கு நேர்முகத் தேர்வு!

August 2, 2026 12:27 am
சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 300 பேருக்கு நேர்முகத் தேர்வு!
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் நாளை மறுதினம் (03.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.

கட்டமைக்கப்பட்ட இந்த நேர்முகத் தேர்வுகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை (03.08.2026) முதல் 21.08.2026 ஆம் திகதி வரை பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் நடைபெறவுள்ளன. இதற்கென ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, தினமும் மூன்று நேரப் பிரிவுகளாக குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைச் சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த 300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,548 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வோடு குறித்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேர்முகத் தேர்வுக் குழுவினருக்குக் கடுமையான அறிவுறுத்தல்களினை வழங்கியுள்ளார்.

இதில் எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத் தேர்வில் வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் நியாயமான மற்றும் ஆதாரபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும் எனவும், நியமிக்கப்பட்டுள்ள ஆறு குழுக்களும் எந்தவிதப் பாரபட்சமுமின்றி ஒரே மதிப்பீட்டு அளவுகோல்களையே பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். நேர்முகத் தேர்வின்போது அரசியல், நிர்வாக அல்லது வெளிப்புறத் தலையீடுகளுக்குத் துளியளவும் இடமளிக்கக் கூடாது எனவும், முறைகேடு அல்லது அதிகாரத் துஷ;பிரயோகம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now