New Updates! Fresh news just arrived.

மேர்வின் சில்வாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விச...

News

மேர்வின் சில்வாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை!

January 19, 2026 7:15 pm
மேர்வின் சில்வாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை!
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தினை விஞ்சி சொத்துக்களினைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முஹம்மட் மிஹால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலஞ்ச ஊழல் விசார​ணை ஆணைக்குழுவினுடைய நெறிப்படுத்தலின் கீழ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளாகப் பெயரிடப்பட்டிருந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கவினைச் சேர்ந்த நான்கு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதோடு, மேலதிக சாட்சி விசாரணைகளினை எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தனது சட்டரீதியான வருமானத்தினை விட 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிகளவான சொத்துக்களினை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததின் ஊடாக, ஊழல் தடுப்புச் சட்டத்திம் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now