New Updates! Fresh news just arrived.

ஈரான் வழக்கம்போல் இயங்குகிறது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ...

News

ஈரான் வழக்கம்போல் இயங்குகிறது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்!

March 14, 2026 9:45 pm
ஈரான் வழக்கம்போல் இயங்குகிறது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள போர்நிலையிலும், ஈரான் நாடு வழக்கம்போல இயங்கி வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நியாயமற்று திணிக்கப்பட்ட இந்தப் போர் தொடங்கியதிலிருந்து 15 நாட்கள் கடந்துள்ளன. போக்குவரத்து, தொடர்பு உள்ளிட்ட பல சவால்கள் இருந்தபோதிலும், அரசாங்க அதிகாரிகளின் முயற்சியால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் பெரிய தடங்கல் எதுவும் ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஈரான் மக்களின் ஒத்துழைப்புடன் இந்த சூழ்நிலையை நாம் கடந்து சென்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அழித்த அனைத்தையும் முன்னைவிட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்புவோம்” என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now