ஈரான் ஹோர்முஸ்' நீரீணையை தனக்கான பேச்சுவார்த்தை ஆயு...
News
ஈரான் ஹோர்முஸ்' நீரீணையை தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது!
ஈரான் நாட்டினுடைய ஹோர்முஸ் நீரீணையை பிராந்திய நாடுகள் தங்களது பலத்தை உறுதிப்படுத்துகின்ற ஒரு பேச்சுவார்த்தை கருவிபோன்றே பார்ப்பதாக மத்திய கிழக்கு நுண்ணறிவு நிறுவனத்தினுடைய (Middle East Insights Institute) நிறைவேற்றுப் பணிப்பாளரான முகமது அல்-ஹாஷெமி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் (UNGA) உரையாற்றிய ஈரானின் ஜனாதிபதியான பெசெஷ்கியான், பிராந்திய விவகாரங்களில் அமெரிக்காவினுடைய தலையீடு இன்றி நாடுகள் சுமுகமாக தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அல்-ஹாஷெமி, வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் கருத்துக்கள் ஊடாக தாக்குதல் நடத்திய ஒரு நாட்டவரிடம் இருந்து இத்தகைய அறிக்கை வருவது வேடிக்கையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிராந்தியத்தில் நல்ல எண்ணத்தினை வெளிப்படுத்தவும் அமைதியினை நிலைநாட்டவும் புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MoU) மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.