New Updates! Fresh news just arrived.

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை: உலக சந்தையில் எரிபொருள் வில...

News

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை: உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!

May 28, 2026 4:19 pm
ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை: உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!
ஈரானினுடைய பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் 3 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றினுடைய விலையானது 3.75 சதவீதம் அதிகரித்து தற்போது 97.8 டொலராகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி கொண்டிருந்த வேளையில், இரு தரப்புக்கும் இடையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

பந்தர் அப்பாஸ் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் தளங்களின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

எந்த நாட்டிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்பது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றபௌதும் ஈரானால் நடத்தப்பட்ட சில தாக்குதல்களினை முறியடித்துள்ளதாக குவைத் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now