New Updates! Fresh news just arrived.

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

News

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

March 7, 2026 8:03 pm
அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!
நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவினுடைய கோரிக்கை, "அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு" என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட உரையில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்காக அவர் மன்னிப்பு கோரியதோடு, தெஹ்ரான் அத்தாக்குதல்களினை நிறுத்தும் எனவும் உறுதியளித்துள்ளார்.

குறித்த தாக்குதல்கள் படைகளுக்கு இடையிலான தொடர்பாடல் குறைபாடுகளினால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களினை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (07) காலை வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் தீவிரத் தாக்குதல்களினை நடத்திய போதே குறித்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகள் மீது இன்று காலை மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்திருந்தன.

துபாயில் சனிக்கிழமை காலை பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதோடு, தமது வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயற்படுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கமானது தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now