மீலாதுன் நபி விழாவையொட்டி மாணவர்களுக்கான இஸ்லாமியப் போட்ட...
News
மீலாதுன் நபி விழாவையொட்டி மாணவர்களுக்கான இஸ்லாமியப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டி: கொழும்பு மாநகர சபை அறிவிப்பு!
கொழும்பு மாநகர சபையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மீலாதுன் நபி விழா எதிர்வரும் 2026 செப்டம்பர் 1ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கொழும்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மேல் மாகாண அரச பாடசாலைகளின் மாணவர்களுக்காக இஸ்லாமிய சமயப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இஸ்லாமிய சமயப் போட்டிகள் எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பு 07, புதிய நகர மண்டபத்தில் (New Town Hall) நடைபெறவுள்ளன. இரண்டு வயது பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப்போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவரை மட்டுமே பாடசாலைகள் பரிந்துரைக்க முடியும். மொத்தமாக ஆறு போட்டியாளர்களை பெயரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெறும்.
8 மற்றும் 9ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பாக "உலக மக்களின் மனதை ஒளிரச் செய்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள்" (குறைந்தது 150 சொற்கள்) என்பதும், 10 மற்றும் 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தலைப்பாக "உலகையே வியக்க வைத்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகள்" (குறைந்தது 200 சொற்கள்) என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டிகளில் ஒவ்வொரு வயது பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்களின் விடைத்தாள்கள், பெற்ற புள்ளிகள் மற்றும் விபரங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு முன்னர் commissioner@colombo.mc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அவற்றின் அசல் பிரதிகளை பதிவு தபால் மூலம் கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இஸ்லாமிய சமயப் போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை 2026 ஆகஸ்ட் 5ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு முன்னர் 0712502282 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது அறிவிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் அசல் பிரதியை காலை 8.00 மணிக்கு ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அறிவு, எழுத்தாற்றல் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் 2020ம் ஆண்டு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் வருடாவருடம் நடைபெறும் மின் அலங்கார வேலைகள், கலை, கலாச்சார போட்டிகளின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கான இப்போட்டிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்