இஸ்ரேல் பொதுத் தேர்தல்: நெதன்யாகு தரப்புக்கு 53 ஆசனங்கள்;...
News
இஸ்ரேல் பொதுத் தேர்தல்: நெதன்யாகு தரப்புக்கு 53 ஆசனங்கள்; அரபுக் கட்சிகளுக்கு வரலாற்றுச் சாதனையாக 19 ஆசனங்கள்
இஸ்ரேல் பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் அந்த நாட்டின் மத்திய தேர்தல் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு 53 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எதிரணியில் காடி ஐசன்கோட் தலைமையிலான அணிக்கு 48 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
அதே நேரம், அரபுக் கட்சிகள் சேர்ந்து வரலாற்றுச் சாதனையாக 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் (Knesset), ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 61 ஆசனங்களைப் பெறுவது அவசியமாகும். எனினும், பிரதான அரசியல் அணிகளில் எதுவும் இந்தப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இதனால், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அரபுக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.