டொனால்ட் டிரம்பின் காசா திட்டத்தை நிராகரித்துள்ள இஸ்ரேல்!...
News
டொனால்ட் டிரம்பின் காசா திட்டத்தை நிராகரித்துள்ள இஸ்ரேல்!
காசா பகுதிக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார்.
காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களினை "முழுமையாக நிராயுதபாணியாக்க" ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக டிரம்பினுடைய அமைதி மன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
ஆனால், இஸ்ரேல் தனது அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து, அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றால் மட்டுமே, தனது கனரக ஆயுதங்களை ஒப்படைப்பது நிபந்தனைக்குட்பட்டது என்று ஹமாஸ் கூறியுள்ளது.
அக்டோபரில் ஒரு அடிப்படைப் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது தொடர்ந்து குண்டுவீசி வருகிறது.
"இந்த 15 அம்ச ஆவணத்தை நான் நிராகரிக்கிறேன்," என்று (09) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
"ஹமாஸ் உண்மையாகவே ஆயுதங்களைக் கைவிடும் வரை இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்காது, மேலும் நமது படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தடுக்கும்," என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காசாவுக்கான ஆயுதக் குறைப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் கூறியதைத் தொடர்ந்து, "நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கை" என்று டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.
ஆனால், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு ஹமாஸ் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், அது வெறும் போலியான ஆயுதக் களைவாக இருக்க முடியாது என்றும் நெதன்யாகு வலியுறுத்தினார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.