தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு! -...
News
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது,
இதன்படி, சீடோன் மற்றும் அல்-கத்ரானி நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனுடன், தெற்கு நகரமான நபதியே (Nabatieh) நகரின் நன்ஸ் (Nuns) பகுதியில் இடம்பெற்ற மற்றொரு இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெப்ரவரி மாதம் 28 முதல் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதே நேரத்தில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 8,31,000 ஐ கடந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவல்: அல் ஜசீரா