கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் எழுந்துள்ள பர்தா ஆடை ...
News
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் எழுந்துள்ள பர்தா ஆடை தொடர்பான பிரச்சினை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள் பதிவு!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களினுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நேற்று (10) மாலை கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினுடைய அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினுடைய பிரதிப் பணிப்பாளரினையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியினையும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களினை மேற்கொண்டனர்.
எனினும், குறித்த சந்திப்பின் போது நியமனம் பெற்றுள்ள உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என நிலைப்பாட்டினை அதிகாரிகள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை தீவிரமடைகின்றது
இதன்படி, பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களோடு, மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களினுடைய அடிப்படை உரிமைகளானது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
"இன்று அல்லது நாளை மறுதினம், குறித்த அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் நோட்டீஸ்கள் அனுப்பப்பட உள்ளதோடு அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளினையும்,, விசாரணைகளினையும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்."
மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுக்கும் வகையில், குறித்த விடயம் தொடர்பாக இலங்கையினுடைய உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பினுடைய சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்