நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை
News
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2:00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
அத்தோடு வடக்கு மற்றும்
வட-மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் மின்னல் மற்றும் தற்காலிகமான பலத்த காற்று ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.