வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் ஹெரோயின் கடத்திய...
News
வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் ஹெரோயின் கடத்தியவர் யாழில் கைது!
வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில்
போதைப் பொருளை கடத்தி அதனை யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவரினை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று (9) கைது செய்துள்ளனர்
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன கூறுகையில்,
யாழ் மாவட்டத்தினுடைய பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவும், பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த இவ்நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் உடுவில் பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடைத ஒருவரே இவ்வாறு வாசனை சவற்காரங்களோடு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் சோதனையின் பொது
வெளியிடமொன்றில் இருந்து பார்சல் சேவிஸ் மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில் மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைது செய்தப்பட்ட குறித்த நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மதமும் சிறிய அளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவராவார்.
இதன்படி, குறித்த கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளோடு, கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவித்தார்.
பு.கஜிந்தன்