New Updates! Fresh news just arrived.

யாழில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி

News

யாழில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி

November 1, 2026 8:16 pm
யாழில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி
யாழ்ப்பாணம், அளவெட்டி - அழுக்கை சந்தி பகுதியில் இன்றைய தினம் (1) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளொன்றில் அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், அளவெட்டி - அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுத் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்துத் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now