New Updates! Fresh news just arrived.

யாழ். தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் ...

News

யாழ். தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 2, 2026 10:56 pm
யாழ். தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 23 கால் போத்தல் சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் மாவா, ஐஸ் போதைப் பொருள் போன்றவற்றை விற்பனை செய்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேற்குறித்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now