New Updates! Fresh news just arrived.

யாழ். வட்டு கல்லூரியின் வருடந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்...

News

யாழ். வட்டு கல்லூரியின் வருடந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!

February 15, 2026 6:06 pm
யாழ். வட்டு கல்லூரியின் வருடந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!
யாழ். வட்டு கல்லூரியினுடைய வருடந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது நேற்று (14) நடைபெற்றது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதுடன், அணி நடையுடன் விளையாட்டு போட்டி ஆரம்பமானதோடு, பின்னர் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுவட்டு நிகழ்ச்சிகள், இடைவேளை நிகழ்ச்சி மற்றும் விருந்தினர்களினுடைய உரைகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பனவும் இடம்பெற்றன.

கல்லூரியினுடைய அதிபர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற குறித்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக வலிகாமம் திருகோணமலை விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளரான எஸ்.விஷ்ணுதாசன் கலந்து சிறப்பித்ததோடு, ஏனைய விருந்தினர்கள், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அயற்பாடசாலை அதிபர் - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மாணவிகள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now