New Updates! Fresh news just arrived.

விவாதச் சமரில் யாழ். இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்க...

News

விவாதச் சமரில் யாழ். இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!

June 29, 2026 12:11 pm
விவாதச் சமரில் யாழ். இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!
மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டு இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற மாகாண மட்ட அறிவிப்பாளர் போட்டியில் வட்டு இந்துக் கல்லூரி மாணவி அருந்தவன் சரணியா முதல் நிலையை அடைந்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் இடம்பெற்ற (29.06.2026) மாகாண மட்ட விவாதப் போட்டியானது யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. பல சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இறுதிப் போட்டிக்கு வட்டு இந்துக் கல்லூரி எதிர் யாழ். இந்துக் கல்லூரி தெரிவாகியிருந்தது.

பரபரப்பான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்ற நிலையில் வட்டு இந்துக் கல்லூரி விவாத அணி யாழ். இந்துக் கல்லூரி விவாத அணியை தோற்கடித்து தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டு இந்துக் கல்லூரி விவாத அணி சார்பில் சந்திரமோகன் ஷைந்தவி,
அருந்தவன் சரணியா,
றுஜிதா ஆனந்தராசா
ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now