New Updates! Fresh news just arrived.

யாழ். சர்வதேச விமான நிலையத்தினுடைய அபிவிருத்திகள் விரிவுப...

News

யாழ். சர்வதேச விமான நிலையத்தினுடைய அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சந்திரசேகரன்!

January 30, 2026 1:25 pm
யாழ். சர்வதேச விமான நிலையத்தினுடைய அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சந்திரசேகரன்!
யாழ். சர்வதேச விமான நிலையத்தினுடைய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய விமான சேவைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என கடற்தொழில் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இது குறித்து வினவியவேளை அவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்னும் வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியினை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு பகுதியின் வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்.

கடந்த அரசாங்கத்தில் குறித்த விமான நிலையமானது ஆரம்பிக்கப்பட்திருந்தாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றது.

நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமானது காத்திரமான பங்களிப்பினை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

யாழ்ப்பாண விமான நிலையத்தினுடைய விமான சேவைகளினை விரிவு படுத்துவது குறித்து விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளினை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்.

அதே போல் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி பணிகளினை விரிவு படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வரும் அதேவேளை, மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியினை மேற்கொள்வதற்காக சுமார் 400 மில்லியன் ரூபாவானத்து ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மயிலிட்டி துறைமுகமானது விடுவிக்கப்பட்டாலும் அதனுடைய அபிவிருத்தி பணிகளில் இடை நடுவில் விடப்பட்டுள்ள நிலையில் நாட்டினுடைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதனை மேற்கொள்வதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளார்.

அத்தோடு, யாழ் கொழும்புத் துறை இறங்கு துறை மற்றும் குறிக்காட்டுவான் துறை அபிவிருத்திகளானது இவ்வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படும்.

எமது அரசாங்கம் நாட்டில் வாழும் சகல இன மத மக்களினையும் இணைத்துக் கொண்டு புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தும் ஒரு அரசாங்கமாக ஆட்சிக்கு வந்தமை யாவரும் அறிந்த விடயம்.

எமது அரசாங்கத்தினுடைய பயணத்தினை தடுத்த நிறுத்தலாம் என சிலர் நினைக்கின்றார்கள் காரணம் கடந்த காலங்களினைப் போல திருடர் யுகம் ஒன்றினை மீண்டும் கொண்டு வருவதற்காக துடிக்கின்றார்கள்.

இந்நாட்டை மீண்டும் ஒரு அழிவு பாதைக்கு இட்டுச் செல்வதற்கு இன்னும் சிலர் இனவாதத்தினை கையில் எடுக்கின்றார்கள் அது அவர்களிணுடைய அரசியல் இருப்புக்களினை தக்க வைத்துக் கொள்வதற்கும் இழந்து போன அரசியலினை மீண்டும் புத்துயிர் படுத்துவதற்கே.

எனவே, வடக்கு மக்களுக்கு தெளிவாக ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எமது அரசாங்கம் மக்களினுடைய அடிப்படை வசதிகளினை பூர்த்தி செய்யும் ஒரு அரசாங்கமாக செயல்படும் அதேவேளை அபிவிருத்தி பணிகளினையும் தொடர்சியாக முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now