New Updates! Fresh news just arrived.

யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!

News

யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!

January 23, 2026 12:33 pm
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரானது இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்திற்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரினுடைய ஆட்டங்கள் இம்முறை இலங்கை மாற்றும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்தோடு, உலகக்கிண்ணத் தொடரானது ஆரம்பமாகின்றது.

இந்நிலையில், தொடரை நடத்தும் நாடு என்னும் அடிப்படையில், இலங்கையில் நேற்று உலகக்கிண்ணமானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதிவரை குறித்த உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கிண்ணம் எடுத்துவரப்படும் என தெரியவருகின்றது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now