அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக...
News
அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்: யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் வலியுறுத்தல்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்கொண்டுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனினுடைய உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்கின்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினரான என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (23) வெளியிட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"சகோதரர் சிவராசா அனோஜனுடைய குற்றம் குறித்து நாம் பேசுவதை விட, மனிதாபிமானத்தின் அடிப்படையில் மனித உயிரை பாதுகாக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும், ஜீவகாருண்யத்தினையும் வலியுறுத்தும் புனித இஸ்லாமிய சமயத்தின் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணத்தினுடைய முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் உறுதியாக நிற்கின்றது."
அனோஜனினுடைய விவகாரத்தில் அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது உயிரினை பாதுகாப்பதற்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அனைத்து விதமான சட்ட, இராஜதந்திர மற்றும் சர்வதேச முயற்சிகளினையும் முன்னெடுப்பது.இந்த விவகாரத்தினை பயன்படுத்தி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளினையும் வெறுப்பையும் தூண்ட முயற்சிப்பவர்களினுடைய செயற்பாடுகளில் இருந்து மக்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது.
இவை இரண்டுமே மிகுந்த பொறுப்புணர்வோடும், நிதானத்துடனும் அணுகப்பட வேண்டிய முக்கிய பணிகளாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரு மனித உயிரினை காப்பாற்றுவதும், அதேவேளை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் நல்லிணக்கத்தினையும் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் எனவும் தனது ஊடக அறிக்கையில் முழுமையாக வலியுறுத்தியுள்ளார்.
பாறுக் ஷிஹான்