New Updates! Fresh news just arrived.

யாழ். போதனாவில் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் - பாதுகாப்பு...

News

யாழ். போதனாவில் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் - பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் கத்திக்குத்து!

January 14, 2026 1:29 pm
யாழ். போதனாவில் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் - பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் கத்திக்குத்து!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அதிகாலை 1.40 மணியளவில் போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 24ஆம் இலக்க விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இதன்போது குறித்த நபர் தாதிய உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாடு, பொருத்தமற்ற வார்த்தைகளை பேசி, விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.

அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அச்சுறுத்தியுள்ளார்.

அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகஸ்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், தாக்குதலை நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now