யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள் போராட்டம்!...
News
யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினுடைய சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானது விடுக்கப்பட வேண்டும் என்று கோரி நேற்றையதினம் போராட்டத்தினை ஆரம்பித்த நிலையில் அது இன்றையதினமும் இடம்பெற்றது.
யாழ்ப்பாண வைத்தியசாலையினுடைய சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானது 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றுகின்ற தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்திநை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும் வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடும் ஏற்பட்டது.
இதன் பின்னர் நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்றையதினம் பிரச்சனை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வை நடாத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.
இருப்பினும் சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்