யாழ். சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் க...
News
யாழ். சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது!
நேற்று நள்ளிரவு சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களோடு இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மயிலணி பகுதியில் வைத்து 10 கிராம் ஐஸ் போதைப் பொருட்களினை 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஏற்கனவே மல்லாகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மயிலங்காடு பகுதியில் வைத்து 100 போதை மாத்திரைகளோடு, 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கு எதிராகவும் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளினை தொடர்ந்து அவர்கள் இருவரினையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்