யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை! -...
News
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையினையும், தங்கையினுடைய கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரினுடைய மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்விலுள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளினை முடுக்கிவிட்ட நிலையில் அவர்கள் பரந்தன் பகுதியிலுள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தமை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளினை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரினையும் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளினை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயமானது தெரிய வந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவரது சடலத்தினை எடுத்து சென்று யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, அந்த சடலத்தினை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்