New Updates! Fresh news just arrived.

யாழ்.தென்மராட்சி புத்தூர் சந்திப்பகுதியில் விபத்து: பெண் ...

News

யாழ்.தென்மராட்சி புத்தூர் சந்திப்பகுதியில் விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு!

October 6, 2026 7:33 pm
யாழ்.தென்மராட்சி புத்தூர் சந்திப்பகுதியில் விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு!
வேம்பிராய் பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று புத்தூர் சந்தியால் சாவகச்சேரி நோக்கி பயணிப்பதற்கு திரும்பிய நிலையில் பெண் ஒருவர் சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சிக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 37 வயதுடைய வரதன் சோபிதா என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now