வடக்கில் முதலிட ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்: ஜப்பானிய...
News
வடக்கில் முதலிட ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்: ஜப்பானிய தூதுவர் தெரிவிப்பு!
வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை இன்று (23) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள ஜப்பானியத் தூதுவரை ஆளுநர் வரவேற்றதோடு, வடக்கு மாகாணத்தின் தற்போதைய பொதுநிலைமைகள், அபிவிருத்தி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் தாம் மேற்கொண்ட சந்திப்புகள் குறித்து ஆளுநருக்குத் தெரியப்படுத்திய ஜப்பானியத் தூதுவர், நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலும் தாம் அவதானித்த விடயங்களினையும் பகிர்ந்து கொண்டார்.
வடக்கு மாகாணத்தினுடைய அபிவிருத்தியில், கடந்த காலங்களில் போதிய கவனம் செலுத்தப்படாத கிராமப்புறப் பகுதிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறித்த பகுதிகளின் அபிவிருத்திக்காக குறிப்பிடத்தக்க அளவிலான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பெறுமதிசேர் உற்பத்திகளினை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் போதிய அளவில் இல்லாதமை தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார். அத்தோடு, வடக்கு மாகாணத்தில் எதிர்பார்க்கப்படும் மூன்று முதலீட்டு வலயங்கள் குறித்தும் அவர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
மேலும், விவசாயம், மீன்பிடி, கால்நடை மற்றும் வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் வடக்கு மாகாணத்தினுடைய பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ள முக்கியத்துவத்தினை ஆளுநர் எடுத்துரைத்ததோடு, இதற்கு மேலதிகமாகவும் பல்வேறு துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகளானது காணப்படுவதாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தினுடைய மொத்த தேசிய உற்பத்திக்கான தற்போதைய பங்களிப்பு 4.6 சதவீதமாகவுள்ள நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்குடன் மாகாணம் செயற்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது பதவியேற்ற பின்னர் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளினை மேற்கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தினுடைய முதலீட்டு வாய்ப்புகளினை மேலும் மேம்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஜப்பானிய அரசாங்கத்தினுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி விடுவிப்பு மற்றும் அதுதொடர்பான மக்களினுடைய போராட்டங்கள் குறித்தும் ஜப்பானியத் தூதுவர் கேட்டறிந்தார். மக்களினுடைய எதிர்பார்ப்புகள் அரசாங்கத்தின் மீது அதிகமாகக் காணப்படுவதன் காரணமாகவே பல சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும், அரசாங்கம் படிப்படியாக காணிகளினை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், பலாலி விமான நிலையத்துக்காக 1986ஆம் ஆண்டளவில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய இழப்பீட்டினை வழங்குவதற்கான பொறிமுறை தற்போதைய அரசாங்கத்தினுடைய கீழ் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் குறித்த மாத இறுதிக்குள் மேலும் சில காணிகள் விடுவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களினுடைய காணி ஆவணங்கள் மற்றும் காணி உரிமை தொடர்பிலும் தூதுவர் கேட்டு அறிந்தார். இதன்போது, வன்னிப் பிரதேசத்தில் மக்களிடம் காணப்பட்ட காணி ஆவணங்களும் மற்றும் அரச திணைக்களங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த காணி ஆவணங்களும் போரால் அழிவடைந்தமையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆளுநர் விளக்கமளித்தார். தற்போது பகுதிநாட் கூட்டங்களை நடத்தி மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பிரச்சினைகள் இல்லாத காணிகளுக்கான உரித்தை வழங்குவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விவகாரம் குறித்தும் ஜப்பானியத் தூதுவர் கேட்டறிந்தார். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிடையே அரசாங்கத்தினுடைய மீதான நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் ஆர்வம் தெரிவித்தார். குறித்த விடயத்தில் விசாரணைகளின் முன்னேற்றம் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
ஜப்பானிய முதலீட்டாளர்கள் இலங்கையினுடைய தற்போதைய பொருளாதார மற்றும் முதலீட்டு சூழலை அவதானித்து வருவதாகக் குறிப்பிட்ட தூதுவர், வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளினை மேற்கொள்வதற்கான ஆர்வம் அவர்களிடம் காணப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் ஏனைய மாகாணங்களோடு, ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் ஜப்பானிய மொழியைக் கற்றவர்களினுடைய எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், வடக்கு மாகாணத்தில் ஜப்பானிய மொழிக் கற்கைகளினை ஆரம்பிப்பது தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜப்பானியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரினுடைய செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
பு.கஜிந்தன்