New Updates! Fresh news just arrived.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட ஐவர் கைது! - G...

News

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட ஐவர் கைது!

January 20, 2026 9:24 am
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட ஐவர் கைது!
ஜிந்துபிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரினை கொலை செய்து, இரண்டு பிள்ளைகளுக்கு காயங்களினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) மற்றும் நேற்று முன்தினம் (18) ஆகிய தினங்களில் கரையோரப் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளால் ஜிந்துப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் 4 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினோடு, கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 3 சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடைய கொழும்பு 13 பிரதேசத்தினை சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, அவர்களில் ஒரு சந்தேக நபரினை 23 ஆம் திகதி வரைக்கும் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏனைய சந்தேக நபர்கள் மற்றும் பெண் சந்தேக நபர் ஆகியோரினை எதிர்வரும் 26 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளினை கரையோரப் பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பணியகமாகியவை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now