இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக...
News
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு!
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணியின் புதிய நிருவாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (09) காலை 10:30 மணியளவில் யாழ் கிளைத் தலைமைச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நடைபெற்ற இந்த நிருவாகத் தெரிவின் போது, யாழ் கிளை இளைஞர் அணியின் புதிய தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிருவாக உறுப்பினர்களும் இதன்போது முறைப்படி தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசியத் தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்
அவருடன் சங்கத்தின் உயர் அதிகாரிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர் அணி பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லின்ரன் தலைமையிலான நிருவாகம், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் யாழ் மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் மனிதாபிமானப் பணிகள் மற்றும் இளைஞர் வலுவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.