ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு: திகதி நிர்ணயம்! - Gur...
News
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு: திகதி நிர்ணயம்!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பிலான 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பைச் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிப்பதற்குத் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,000க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கின் பிரதிவாதிகள், தங்களுடைய தற்காப்பு வாதங்களினை முன்வைப்பதை கடந்த (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தொடங்கினர்.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகள் கொண்ட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே குறித்த விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.