New Updates! Fresh news just arrived.

காலியில் இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

News

காலியில் இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

September 8, 2026 10:05 am
காலியில் இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது
இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரியுள்ளதோடு, பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர், இவ்விரு பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, அவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகக் கோரப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now