New Updates! Fresh news just arrived.

'கைவாரு முது' 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரண...

News

'கைவாரு முது' 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணை!

November 6, 2026 10:45 pm
'கைவாரு முது' 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணை!
டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மனோஜ் முதுகுமார எனும் ‘கைவாரு முது’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

சந்தேகநபர் இன்று (6) டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடுவலை, கொரதொட்ட தெற்குப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு அத்துரிகிரிய பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை, 2026 ஆம் ஆண்டு தெல்கொட பகுதியில் நபரொருவரை வெட்டிக் கொலை செய்தமை மற்றும் 2024 ஆம் ஆண்டு நவகமுவ பகுதியில் நபரொருவரைக் கடத்திச் சென்று சுட்டுக்கொலை செய்தமை ஆகியன இதில் முக்கியமானவையாகும்.

மேலும், 2024 ஆம் ஆண்டு நவகமுவ பகுதியில் வியாபாரத் தலமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை, கொரதொட்ட பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தமை ஆகிய பல குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராகக் கடுவலை மற்றும் ஹோமாகம நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, பெறப்பட்ட 72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now