கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு – காயமடைந்தவர் சிகிச்சை பலனின்ற...
News
கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு – காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இரு அடையாளம் காணப்படாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாட்டின் பின்னணியில் இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை கண்டறியவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.