கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவத் ...
News
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்குச் சின்னம் சூட்டும் விழா!
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்களுக்குச் சின்னம் சூட்டும் விழா, பாடசாலை அதிபர் அஷ்-ஷேஹ் எம்.ரீ.ஏ. முனாப் (ஹாமி) தலைமையில் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
ஒழுக்காற்றுப் பிரிவின் தலைவர் எம்.சி. ஹிஜாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை தலைமைப் பொலிஸ் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் லசந்த கழுவாராய்ச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதம அதிதி, பாடசாலைக் காலம் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பருவம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதுடன், குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து முற்றாக விலகி, சமூகத்திற்குப் பயனுள்ள சிறந்த பிரஜைகளாக உருவாக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மாணவத் தலைமைத்துவம் என்பது ஒரு பதவியைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதும், பாடசாலையின் ஒழுக்கம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் பொறுப்புடன் செயற்படுவதும் ஆகும் என்ற அடிப்படையில் மாணவர்கள் தமது கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, பிரதம அதிதி, பாடசாலை அதிபர், ஒழுக்காற்றுச் சபையின் தலைவர், பகுதித் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட ஆசிரியர்கள் இணைந்து புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களையும் நியமனக் கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வு, மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்புகள், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் அமைந்தது. நிகழ்வின் இறுதியில், ஒழுக்காற்றுச் சபையின் செயலாளர் ஜே.எம். நௌஃபால் நளிமி நன்றியுரை வழங்கினார்.
நூருல் ஹுதா உமர்