New Updates! Fresh news just arrived.

தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்த...

News

தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்!

March 1, 2026 9:02 pm
தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்!
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என கல்முனையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் ஒன்றினை வழங்கியுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த மாணவர்களின் நலன் கருதி குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிந்த கையோடு உடனடியாகவே கல்விப் பொதுத் தராதர உயர் தரத்திற்கான புதிய வகுப்புகளினை ஆரம்பிக்க சில தனியார் கல்வி நிலையங்கள் ஏட்டிக்குப் போட்டியாக முனைவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த விடயமாக ஏலவே சொல்லப்பட்ட ஆலோசனைகல் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் குறித்த கல்வி நிலையங்கள் பொருட்படுத்தாமல், உதாசீனமாக செயற்படுவதானது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே, குறித்த விடயத்தில் கல்முனை மாநகர சபையானது இவ்வறிவுறுத்தலை விடுப்பதோடு, இறுக்கமான நடவடிக்கைகளினை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது- எனவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now