மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்! -...
News
மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்!
மே தினத்தை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தையானது மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார்.
கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்னும் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு படுத்திய கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எல். கபீர்
எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினருக்கும் பொதுச் சந்தையில் உள்ள தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடலானது எமது வர்த்த சங்க காரியாலத்தில் நடைபெற்றது குறித்த கலந்துரையாடலில் எதிர் வரும் மே தின ஓய்வு சம்பந்தமாக தொழிலாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்க்கப்பட்டதோடு, கல்முனை மாநகர ஆணையாளரினுடைய உத்தரவிற்கு அமைவாக எதிர்வரும் மே 1ம் திகதி ( வெள்ளிக்கிழமை) எமது பொதுச்சந்தையினை முற்று முழுதாக மூடி அத்தினத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு அமைவாக அத்தினத்தில் எமது பொதுச் சந்தையினுடைய வளர்ச்சிக்கும் அன்றாட இயங்குதலுக்கும் அர்ப்பணிப்போடு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அன்றைய தினம் தொழிலாளர்களினுடைய ஓய்வினை உறுதிப்படுத்தும் பொருட்டு, சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளானது முழுமையாக இடைநிறுத்தப்படும்.
ஆகவே அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களினது தொழிலாளர்களுக்கு குறித்த விடுமுறையினை வழங்கி, சர்வதேச தொழிலாளர் தினத்தினை சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
"உழைப்பால் உயர்வோம், உழைப்பவரை மதிப்போம்."
ஆகவே குறித்த தினத்தினை சிறப்பிக்கும் முகமாக நாம் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி கடந்த வருடத்தில் சிறப்பித்தது போன்று இதனை சிறப்பிக்கவுள்ளோம்.
ஆகவே அத்தினத்தில் எங்களோடு சேர்ந்து சிறப்பிக்க விருப்பமானவர்கள் தயவுசெய்து எமது வர்த்த சங்க காரியாலயத்தில் தங்களுடைய பெயரினையும் தொலைபேசி இலக்குத்தினையும் கொடுத்து வருகையினை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதில் உறுதிப்படுத்தாத எவரும் தயவு செய்து குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்பதினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறித்த அறிக்கையின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
பாறுக் ஷிஹான்