கல்முனை - பாண்டிருப்பில் வீதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு,...
News
கல்முனை - பாண்டிருப்பில் வீதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மற்றையவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை - பாண்டிருப்பு பிரதான வீதியில் இன்று மாலை (02) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய பட்டாரக (Batta) வாகனம் ஒன்று, கல்முனை தாழவட்டுவான் சந்திக்கு அருகாமையில் பயணித்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் லொத்தர் விற்பனை நிலையம் தரைமட்டமாகியதுடன், அங்கிருந்த தூண்கள் மற்றும் மின்குமிழ்களும் துக்கி எறியப்பட்டு சிக்குநநூராகியுள்ளது.
இந்த விபத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில், பட்டா ரக வாகனத்தை செலுத்தி வந்த சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன் வாகன சாரதியை காப்பாற்ற முயற்சி எடுக்கும் போது வாயில் நுரை வெளிவந்ததுடன் பாரிய மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் பட்டாரக வாகனத்தின் சாரதியும், கடும் விபத்துக்குள்ளான லொத்தர் விற்பனை செய்யும் கடையில் இருந்தவரும் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியோடு மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் வாகன சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வாகன சாரதி பொலநறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் தற்போது சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
(ஷனா)