கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: தீர்வு கிடைத்துவிட்டதா...
News
கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: தீர்வு கிடைத்துவிட்டதாக ஆதம்பாவா எம்பி அறிவிப்பு!
அண்மையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் பெண்கள் ஸ்காப் (ஹிஜாப்) அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இனவாதச் செயற்பாடுகளுக்குத் தாம் முற்றுப்புள்ளியினை வைத்துவிட்டதாகத் தேசிய மக்கள் சக்தியினுடைய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (13) கல்முனை 'யங் பேட்ஸ்' ஜனாஸா நலன்புரி அமைப்பினுடைய அங்கத்தவர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:
"அண்மையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் எழுந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை தொடர்பில் சுகாதார பிரதி அமைச்சர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளோடு, உடனடியாகப் பேசி நடவடிக்கையினை எடுத்தேன். அதனடிப்படையில், தற்போது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் எந்விதமான அசௌகரியங்களும் இன்றித் தங்களது கடமைகளினை செய்து வருகின்றனர்.
இதன்படி, பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு காணப்பட்டதினை சகித்துக்கொள்ள முடியாத சிலர், பாராளுமன்ற உறுப்பினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளினை மறந்து விட்டுக்கொடுப்போடு, வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, மக்களினுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
பாறுக் ஷிஹான்