New Updates! Fresh news just arrived.

ஜனாதிபதி சாரணர் விருதுக்குத் தெரிவான கல்முனை மாணவன்! - Gu...

News

ஜனாதிபதி சாரணர் விருதுக்குத் தெரிவான கல்முனை மாணவன்!

November 9, 2026 6:04 pm
ஜனாதிபதி சாரணர் விருதுக்குத் தெரிவான கல்முனை மாணவன்!
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து வரும் இளம் சிரேஷ்ட சாரணர் என்.எம். சஹிம் நாஜிஹ், இலங்கை சாரணர் இயக்கத்தின் உயரிய தேசிய அங்கீகாரமான ஜனாதிபதி சாரணர் விருதுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

கல்முனை சாரணர் மாவட்டத்தின் ஊடாகத் தனது சாரணியப் பயணத்தை முன்னெடுத்து வரும் இவர், சிறுவயது முதலே சாரணியத்தில் கொண்டிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் சமூக சேவை மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் இவ்வுயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பதவி நிலை முகாமைத்துவ உத்தியோகத்தர் அப்துர் ரஹ்மான் நஜிபுதீன் மற்றும் மல்ஹறுஸ் சம்ஸ் வித்தியாலய ஆசிரியை முஹம்மது ஹாமீம் ஸறியா நஜிபுதீன் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரான இவர், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இருமொழிப் பிரிவில் 8A, B பெறுபேறுகளைப் பெற்று சிறப்புச் சித்தியடைந்திருந்தார்.

கல்விச் செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் சஹிம் நாஜிஹின் இச்சாதனை, அவரது பெற்றோர், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை, ஆசிரியர்கள், கல்முனை சாரணர் மாவட்டம் மற்றும் கல்முனைச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

இளம் வயதிலேயே ஒழுக்கம், தலைமைத்துவம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய பண்புகளை வளர்த்துக்கொண்டு தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள மாணவர் சஹிம் நாஜிஹுக்கு கல்விச் சமூகத்தினர், சாரணர் இயக்கத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now