கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் தி...
News
கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கின் இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கினுடைய மேலதிக விசாரணை 2026 நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீதியரசர் மாயாதுன்ன கொரியா மற்றும் நீதியரசர் லக்மாலி கருணாநாயக்க திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு மனுக்களும் இதே அமர்வில் நீதிமன்றத்தின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
வழக்கு விசாரணையின்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.
இதேவேளை, இவ்வழக்கில் இடையீட்டு எதிர்மனுதாரர்களாகவுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையினுடைய முன்னாள் உறுப்பினரான ஏ. கலீல் ரஹ்மான் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.
மேலும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் ஏ.எம். நசீர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள தொடர்புடைய மனுக்களும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, வழக்குடன் தொடர்புடைய தரப்பினரின் சட்ட நிலைப்பாடுகள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்கள் உள்ளிட்ட விடயங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
எனினும், இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய மனுக்களின் மேலதிக விசாரணைகள் தொடர வேண்டியுள்ள நிலையில், வழக்கின் மேலதிக விசாரணையை 2026 நவம்பர் 03ஆம் திகதி பகல் 01.30 மணிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினம் மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான மேலதிக சட்ட வாதங்களும், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நூருல் ஹுதா உமர்