New Updates! Fresh news just arrived.

களுத்துறையில் சொகுசு பேருந்தை வழிமறித்து தாக்கிய சம்பவம்:...

News

களுத்துறையில் சொகுசு பேருந்தை வழிமறித்து தாக்கிய சம்பவம்: அறுவர் கைது!

October 29, 2026 7:14 pm
களுத்துறையில் சொகுசு பேருந்தை வழிமறித்து தாக்கிய சம்பவம்: அறுவர் கைது!
களுத்துறை - கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் பிரவேசித்து சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தி வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

வாத்துவ மற்றும் மொரந்துடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now