New Updates! Fresh news just arrived.

"கனவுப் பாடசாலை" நோக்கிய பயணம் ஆரம்பம்!

News

"கனவுப் பாடசாலை" நோக்கிய பயணம் ஆரம்பம்!

January 29, 2026 1:45 pm
"கனவுப் பாடசாலை" நோக்கிய பயணம் ஆரம்பம்!
இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களினையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டமொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பிள்ளைகளினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதினை வலியுறுத்திய பிரதமர், 2030 ஆம் ஆண்டு வரக்கும் வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

'கனவுப் பாடசாலை' ஒன்றை நோக்கிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தினுடைய பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்போடு செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமாகிய, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களினை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நிலையில் பிரதமர் குறித்த கருத்துக்களினை வெளியிட்டார்.

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மூலமாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தினை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையினுடைய எடையைக் குறைப்பதில் இருந்து ஆரம்பிக்கப்படும் குறித்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலினை உருவாக்கப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now