கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 570 மில்லியன் ரூபா பெறுமதியான...
News
கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 570 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன உபகரண வசதிகள்!
மிக நீண்ட காத்திருப்போர் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் 8,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் இலவச சுகாதார சேவைக் கட்டமைப்பில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வினைத்திறனானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் தற்போது விசேட வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி தேசிய வைத்தியசாலையில் 570 மில்லியன் ரூபாய் (570,000,000.00 ரூபா) பெறுமதியான மூன்று அதிநவீன மருத்துவ உபகரணத் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக நோயாளர் சிகிச்சை சேவைகளுக்காக வழங்கி வைக்கும் நிகழ்வானது, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அவர்களின் பங்கேற்போடும் இன்று (15) முற்பகல் நடைபெற்றது.